சேரன், தன்னுடைய இடுப்பை பிடித்ததாக மீரா மிதுன், குற்றஞ்சாட்டி பிக்பாஸ் வீட்டையே ரணகளம் ஆக்கி விட்டார். இவர் சொல்லவந்ததை, மற்ற விஷயத்தை ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவத்தோடு, இணைத்து பேசியது, இவர் மீது மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை வரவைத்து.

இதை தொடர்ந்து, இன்று மீண்டும் தமிழ்ப்பெண், தமிழ்க்கலாச்சாரம் குறித்து ஒரு வம்பை இழுக்கின்றார் மீரா. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், " கேரக்டரில் இருந்து, வெளியே வந்தது யார்? என சாக்ஷி மிகவும் கோபத்துடன் மீராவை பார்த்து மிகவும் கோபமாக கேட்க, சித்தப்பு சரவணன் சொல்லுமா என மீராவிடம் கூறுகிறார்.  இது தொடர்ந்து மீரா... இரண்டு நிமிடம் பேசலாமா என சாக்ஷியிடம் மிகவும் பொறுமையாக கேட்கிறார். 

ஆனால் சாக்ஷி, தேவை இல்லாமல் சேரனிடம் மீரா சண்டை போட்ட விஷயத்தை இழுத்து பேசுகிறார். சாக்ஷி, தொடர்ந்து பேச அதனை மீராவால் சமாளிக்க முடியவில்லை. மேலும் சேரனும் மீரா குறித்து பேசும் காட்சிகள் இடம்பெறுகிறது. ஆனால் கடைசி வரை, சாக்ஷி மீரா என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கூட கேட்காமல், காட்டு கத்து கத்துகிறார்.