பிக்பாஸ் விளையாட்டில் தற்போது 'நாட்டாமை டாஸ்க்' விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. விளையாட்டை சுவாரஸ்ய படுத்த அவ்வப்போது பல பிரச்சனைகளும் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம், மீரா சேரனிடம் வரிந்து கட்டி கொண்டு சண்டை போட்டார். அதே போல் இன்றைய தினமும் ஒரு சில பிரச்சனைகள் வருவது, ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க... பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும் போது, லாஸ்லியா நாட்டாமையின், சொம்பை திருடி வைத்து கொள்கிறார். இவரை தண்டிக்கும் விதமாக லாஸ்லியாவை சேரில் அமரவைத்து அவரை துணியால் கட்டி அங்கேயே இருக்க வேண்டும் என தண்டனை கொடுக்கிறார் சேரன்.

 

இதற்கு பின், சேரன் ஏதோ சத்தமாக பேச, அதற்கு ரேஷ்மா... ஏன் கத்துறீங்க என கேட்கிறார். உடனே சேரன் அனைவருடனும் தான் கத்துவேன் என நாட்டாமையின் கெத்தை காட்ட ரேஷ்மாவும் பதிலுக்கு குரலை உயர்த்துகிறார்.