bigboss show is very bore sathish tweet

உலக நாயகன் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ஏற்கனவே ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில், இதனை வெளிப்படையாக கூறியுள்ளார் ஒரு பிரபலம். 

'உன்னாலே உன்னாலே', 'வாரணம் ஆயிரம்', 'என்றென்றும்', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணன் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிகவும் போர் அடிப்பாதாக குறிப்பிட்டு, இதில் சொந்த பிரச்சனைகள் தான் அதிகமாக பேசப்பட்டு வருவதாகவும், ஆலோசனை தான் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பலர் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்து வரும் நிலையில் இப்போது ஒரு பிரபலம் இப்படி முதல் முறையாக தெரிவித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு உள்ள ஆர்வத்தை குறைக்கும் விதத்தில் உள்ளதாக கூறப்படுகிரத்து.


Scroll to load tweet…