பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒருமாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில், பிரச்சனைக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்த நடிகை வனிதா சென்ற வாரம் வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில், கவின் 'டிக் டிக் டிக்' டாஸ்க்கில் தாமதம் ஆனதாக குறை கூறியதை வைத்து, மீரா அவரிடம் சண்டை போடும் காட்சி வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
இதில், மோகன் வைத்யா, இந்த வார கேப்டன் சாக்சியிடம் தனக்கு தண்ணீரில் நின்று, பாத்திரம் கழுவுவது ஒற்று கொள்ளவில்லை.  எனவே வேறு ஒரு டீமிற்கு மாற்றிவிடுமாறு கேட்கிறார்.

இந்த விஷயத்தை சாக்ஷி, ரேஷ்மாவிடம் கூறும் காட்சி காட்டப்படுகிறது. அதற்கு ரேஷ்மா அவருக்கு கம்மி வேலை தான் கொடுக்கப்படுகிறது என கூறினார்.

இதை தொடர்ந்து, பாத்ரூமில்,  மோகன் வைத்யா, 'எதுவாக இருந்தாலும் நேரடியாக பேச வேண்டியதுதானே என்று சாஷியிடம் கேட்க, அதற்கு சாஷி, 'இங்குள்ள யாரும் நேரடியாக பேச கட்ஸ் இல்லை. எல்லாரும் பின்னாடிதான் பேசுறாங்க' என்று மோகன் வைத்தியாவிடம் சண்டை போடுவது போல் கத்தி பேசுகிறார். ஏன் இந்த பிரச்சனை இவர்களுக்குள் வருகிறது என இன்று இரவு தெரியவரும்.