பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவருக்கு தான் விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக இப்போது கோடம்பாக்கத்தில் அரசால் புரசலாக தகவல் வெளியாகையுள்ளது.

பாரம்பரிய கலைக்குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அது விவாகரத்தில் முடிய, இவர் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து வைலெண்ட் காட்டாமல் சைலண்டாக விளையாடி வெளியேறினார்.

இந்நிலையில் இவருக்கும், சூப்பர் ஸ்டார் பெண் கொடுத்துள்ள, சம்பந்தியின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும், இவருக்கும் தான் தற்போது இரண்டாவதாக திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது, அந்த பாடகியே வாயை திறந்து சொன்னால் தான் தெரியவரும்.