பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும், எப்படி மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம், என்பதை யோசிப்பதற்கு பதிலாக, எப்படி சண்டை போடலாம் என்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

நேற்றைய தினம் கிராமத்து, டாஸ்க் நடந்த போது சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து, தனக்கு வலிக்கும் அளவுக்கு இழுத்தார் என குற்றம் சாட்டுகிறார். இதனை மறுக்காத, சேரன் தன்னுடைய தவறை ஒப்பு கொண்டார். ஆனால் தான் வேண்டும் என்றே செய்யவில்லை. லாஸ்லியாவின், கையில் இருப்பதை என்ன என்பதில் தெரிந்து கொள்வதற்காக தான் இப்படி செய்ததாக சொல்கிறார்.

இதுகுறித்து, போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை கூற சாக்ஷி, கவின் காதில் அப்படி ஒரு சம்பவமே நடக்கல, நான் தான் லாஸ்லியா பக்கத்துல நின்னுகிட்டு இருந்தேன். நடக்காத ஒரு விஷயத்தை கூறி சேரன் மீது வீண் பழி போடுகிறார் மீரா என்பது போல் பேசுகிறார் சாக்ஷி.

இதில் என்ன வேடிக்கை என்றால், மீரா குற்றம் சுமாற்றிய சேரன், தான் அப்படி நடந்து கொண்டது உண்மை தான் என கூறிய போதிலும், சாக்ஷி புதிய கதை ஒன்றை உருவாக்குகிறார். கடைசியில் சேரனோ... மீராவின் பிரச்னையை முடிப்பதற்கு, தான் செய்தது தவறு தான் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு, இனி யாரிடமும் பேசப்போவது இல்லை என கூறிய சம்பவம் பார்க்கும் ரசிகர்கள் மனதையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது.