தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவரான ரைசா, தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல மாடலாக அனைவராலும் அறியப்பட்டார் ரைசா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக, யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டும் இந்த படம் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இருவருக்கும் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரைசா அளித்துள்ள ஒரு பேட்டியில் யாரை திருமணம் செய்ய விருப்பம் என பேசியுள்ளார். அதில் தமிழ் சினிமா முன்னணி நடிகர் தளபதி விஜய் பெயரை கூறியுள்ளார். அதே போல் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா பெயரையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.