பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாடலாக கலந்து கொண்ட ரைசா, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், இதே நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த 'பியர் பிரேமா காதல்' என்கிற படத்தில் நடித்தார்.

இந்த படம் இருவருக்குமே வெற்றி படமாக அமைந்ததால், இருவரும் தற்போது தொடர்ந்து அடுத்தது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் தற்போது ரைசா, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாக 'காதலிக்க யாருமில்லை' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் ஒரு சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு முத்தக்காட்சி வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். அவர் செல்லமாக அவரின் குட்டி நாய்க்கு முத்தம் கொடுக்க அது வேண்டாம் என முகத்தை திருப்பி கொள்கிறது. இருந்தாலும் அவர் விடாப்பிடியாக அதற்க்கு முத்தம் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ இதோ: