விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், அதையும் தாண்டி அனைவரையும் பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்கவில்லை. காரணம் முதல் சீசன் பார்த்து உஷாரான போட்டியாளர்கள்... இரண்டாவது சீசனை நிறுத்து நிதானமாக தங்களுடைய சுய ரூபத்தை வெளிக்காட்டாமல், விளையாடியதாக பலர் விமர்சித்தனர்.

பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான்.

மாடலிங் துறையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்போது தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும்  நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”ஹலோ சகோ' நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டனர்.  அப்போது ஸ்ருதி ஹாசன் ரேசாவிடம் சில கேள்விகளை கேட்டார்

" நீங்கள் டீ டோட்டலரா என ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்".மேலும், நீங்கள் ஆண்களுடன் ( flirt ) அதாவது உல்லாசமாக இருந்துள்ளீர்களா?  என்று கேட்டதற்கு, நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்று மிகவும் சாதாரணமாக கூறினார்.

மேலும் நான் மாடல் என்பதால் வெளியூரில் ஷூட் நடக்கும் அதனால் flirt நடந்துள்ளது என்று கூறி அதிரவைத்தார்.

ரைசா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே புகைப்பிடிப்பவர் என்பது அனைவரும் தெரிந்தது தான், அதே போல் அவருடைய காதல் தோல்வியும் அனைவர்க்கும் தெரியும். ஆனால் flirt செய்துள்ளதை கூட சாதாரணமாக பிளைட்டில் போய் வந்தது போல் இவர் கூறியுள்ளது கேட்பவர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.