பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் சேரன், கஸ்தூரி, சாண்டி, கவின், ஆகிய நான்கு பேர் சிக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாண்டிக்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இந்த வாரம் இவர்கள் வெளியேற வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மீதம் உள்ளவர்கள் என்றால், அது சேரன் மற்றும் கஸ்தூரி இருவர் தான். சேரன் மிகவும் தன்மையாக இந்த நிகழ்ச்சியில் இருப்பது பல ரசிகர்களை கவர்த்துள்ளதால், சேரனும் இந்த வீட்டை விட்டு வெளியேறுவது கண்டினமே. அதே போல் கஸ்தூரிக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

அதனால் இத்தனை நாள் பூட்டியே இருந்த ரகசிய அரை, கஸ்தூரிக்காக திறக்க வாய்ப்பு உள்ளது என்பதே தற்போது பிக்பாஸ் பற்றி வெளியாகியுள்ள அந்த தகவல்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றுவது போல் வெளியேற்றி... மீண்டும் கஸ்தூரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடுவார். ஏற்கனவே, நடிகை மீரா மிதுன் வெளியேறிய போது... அவர் ரகசிய அறையில் தங்க வைக்க படுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

ஆனால் வரும் வாரம், கஸ்தூரி பிக்பாஸ் ரகசிய அறையில் தங்க அதிக வாய்ப்புகள் உள்ள. இது நடக்குமா அல்லது, வேறு ஏதேனும் நடக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.