பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புது புது டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் நேற்று  போட்டியாளர்கள், ஒரு பௌலில் எழுதி போடப்பட்டிருந்த சீட்டை எடுத்து படித்து அதில் இருந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

நேற்றைய தினம் பலர் மீராவுக்கு எதிராக பதில் கூறி இருந்தனர். அதே போல் இன்றைய தினம், போட்டியாளர்களுக்கு 'டிக் டிக் டிக்' என்கிற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்ட ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் சேரன் பிக்பாஸ்ஸிடம் இருந்து வந்த கடிதத்தை படிக்கிறார். அதில் 'டிக் டிக் டிக்' என்கிற ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதை படித்த பின், ஒரு ரூம்மில் நிறைய குட்டி குட்டி கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளது காட்டப்படுகிறது. அதில் ஓடும் கடிகாரத்தை மீரா, சேரன் மற்றும் சாண்டி ஆகியோர் கண்டு பிடிக்கின்றனர்.

அதில் சரியான கடிகாரத்தை சாண்டி கண்டு பிடித்து விட்டு வெளியே ஓடி வரும் காட்சி காட்டப்படுகிறது. இதை தொடர்ந்து மீரா தவறான கடிகாரத்தை தேர்வு செய்ததால் நேரம் வீணானதாக கூறுகிறார் கவின். பின் மீரா எது செய்தாலும் என்னை தான் தவறாக நினைக்கிறார்கள் என கூற இதற்கு கவின் மன்னிப்பு கேட்கும் காட்சியும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 

ஏற்கனவே இனி யார் எது சொன்னாலும் நான் வாயை மூடிக்கொண்டு போக மாட்டேன். என சபதம் எடுத்துள்ள மீரா இந்த பிரச்னையை பெரிதாக்கவும் வாய்ப்பு உள்ளது.