ஜூன் 23 ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.'பிக்பாஸ்' சீசன் 2  நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் கூறியதை தொடர்ந்து, இம்முறை பல்வேறு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுத்து நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள  உள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. 

இதுவரை நடிகை மதுமிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கலந்து கொள்ளவது உறுதி என கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை, நிகழ்ச்சியாளர்கள் தேர்வு செய்து அதனை ரகசியமாக வைத்துள்ளனர்.

தற்போது நடிகர் கமலஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது என கூறும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீடியோ: