பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம், போதும்... போதும்... என்கிற அளவுக்கு போட்டியாளர்களை வெளுத்து வாங்கியது மட்டும் இன்றி அவர்களை புகழவும் செய்தார் கமல். குறிப்பாக வனிதாவிடம் நாம் எந்த அளவிற்கு பேசுகிறோமோ, அந்த அளவிற்கு கேட்கவும் வேண்டும் என சரியான நேரத்தில் பதிலடி கொடுத்தார். 

வனிதா குரலை உயர்த்தி பேசுவதை கண்டித்த, தர்ஷனையும் பாராட்டினார். 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் யாருக்கும் தெரியாமல் இருந்த, தர்ஷனின் காதல் விவகாரம் கமலிடமே  பஞ்சாயத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... " தர்ஷன், ஷெரின் வந்து தன்னிடம் , நீ மீராவிடம் காதலை சொன்னியா என்று கேட்டால். ஆனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என கூறுகிறார்.

இதை தொடர்ந்து பேசும் மீரா, ஒரு விஷயம் சொன்னால் அது திரித்து  திரித்து வேறு ஒரு விஷயமாக மாரி விடுகிறது என கூறுகிறார். பின் இது குறித்து குழப்பமும் அங்கு வருகிறது. 

இதற்கு கமல் இது போன்ற பிரச்சனைக்கு கவின் நீங்களே முடிவு சொல்லுங்கள் என கூறுகிறார். இதற்கு கவின் என்னோடைய பிரச்சனையே பார்க்க முடியாமல் தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கிறேன் என பாவமாக பதில் சொல்லும் காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோ இதோ: