சின்னத்திரையில் 'கனா காணும்' காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர்,  நடிகர் கவின். அதைத்தொடர்ந்து வேட்டையனாக சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த போது, இவரின் காமெடி கலந்த, கிராமத்து கதாபாத்திரம் இவருக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது என்றே கூறலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர், சின்னத்திரையை தாண்டி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'நட்புனா என்னனு தெரியுமா' இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, காதல் மன்னன் என்கிற பெயரை எடுத்துள்ளார். குறிப்பாக நான்கு பெண்களுடன் ஆரம்பமாகிய இவருடைய காதல் கதை, தற்போது இரண்டு பெண்களில் வந்து முடிவடைந்துள்ளது.

கவின் பிரபலமாக இருந்த போதிலும், பலருக்கு இவரை தவிர, அவருடைய குடும்பம் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமலேயே இருந்தது. ஆனால் இப்போது முதல் முறையாக கவினின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில், கவின் அவருடைய அம்மா, அப்பா, மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளார்.