பிக் பாஸ் வீட்டில் முதலில் அபிராமி கவினை காதலிப்பது போல் நடந்து கொண்டாலும், தற்போது முகேனுடன் தன்னுடைய நட்பை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு டாஸ்கில் பேசிய போது கூட, முகேனுக்கும் தனக்கும் உள்ளது நட்பா அல்லது அதற்கும் மேலேயா என தெரியவில்லை என பேசினார். ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் காதலர்கள் போலவே தெரிகிறது.

அபியை தொடர்ந்து, சாக்ஷியும் கவின் மீது காதல் வயப்படுவது போல் நடந்து கொண்டார். ஆனால் கவின் லாஸ்லியாவை சுற்றி சுற்றி வந்தார். இதனால் பல முறை கடுப்பான சாக்ஷி அதனை பெரிதாக வெளிக்காட்டி கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நேற்று சாக்ஷிக்கும், கவினுக்கும் இடையே வந்த பிரச்சனை இன்றும் தொடர்வது காட்ட படுகிறது. 

சாக்ஷியை மீண்டும் சமாதானப்படுத்த கவின் முயற்சி செய்கிறார். ஆனால் சாக்ஷி, அவரது மூஞ்சில் செருப்பால் அடித்தது போல் பேசியதாக கவினே கூறுகிறார். மேலும் இனிமேல் பேசுவதற்கு இருவருக்குள்ளும் ஒன்றுமே இல்லை என்றும்,  நீ உன் வேலையே பாத்துட்டு போ, நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று சாக்ஷி கூறும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.