பிக்பாஸ் வீட்டிற்குள், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்துள்ளார் நடிகை கஸ்தூரி. யாரும், எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் என உள்ளே நுழைந்த இவர் என்ன பிரச்னையை அடுத்தடுத்து உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரையே டம்மியாக்கி தற்போது ஜெயிலில் அமர வைத்து விட்டனர் சக போட்டியாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இவர் ஒவ்வொரு நாளும் வாங்கும் சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கஸ்தூரிக்கு தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களை விட, மிக அதிக சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் நடிகர் சேரனுக்கு தான் அதிக சம்பளம் பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்து வந்ததாகவும், ஆனால் இப்போது 1 . 5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரை இவருக்கு ஒரு நாள் சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் பார்த்தால் 50 தினங்கள் இவர் உள்ளே இருந்தால் கோடிகளுக்கு எகிறும் இவரின் சம்பளம்.

ஏற்கனவே கடந்த 2  சீசன்களில், இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நிகழ்ச்சியாளர்கள் முயற்சி செய்தும் அது முடியாமல் போனது. ஆனால் அதுவே இந்த முறை அது சாத்தியமாகியுள்ளது. 

ட்விட்டர் பதிவுகள் மூலமே பல சர்ச்சையை அசால்டாக கையாளும் கஸ்தூரி. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் ரசிகர்கள் கண்களுக்கு வேறு மாதிரி தெரிகிறார். இவர் அறிவுரை கூற வந்தால் அதை கூட அங்கு உள்ள போட்டியாளர்கள் ஏற்று கொள்ளாமல், இவரை மொக்கை செய்து வருகிறார்கள். இதனால் எப்போது இவரின் கோபம் வெளிவரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.