பிக்பாஸ் வீட்டில் தற்போது லக்சூரி பட்ஜெட்டுக்காக வித்தியாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் பயங்கர கொலைகாரன் ஒருவன் நுழைந்து விட்டதாகவும், போட்டியாளர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.

மேலும் கொலைகாரன் வந்தால்,  எப்படி தாக்குவீர்கள் என்பதையும் பிக்பாஸ் செய்து காட்ட சொன்னார். பின் பிக்பாஸ் இந்த வீட்டின் கொலைகாரனாக தேர்வு செய்தது வனிதாவை தான். அவரின் கூட்டாளியாக தேர்வு செய்யப்பட்டவர் முகேன். பிக்பாஸ் யாரை எப்படி கொலை செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காக சிறிய போன் ஒன்றையும் வனிதாவிடம் கொடுத்தார்.

அந்த வகையில் நேற்று மட்டும் இரண்டு கொலைகள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது. பிக்பாஸ்ஸிடம் இருந்து வந்த உத்தரவின் படி, சாக்ஷியை அவரின் கைகளாலேயே அவருடைய மேக்கப்பை கலைக்க வைக்க வேண்டும். இதை வனிதா செய்து முடித்து விட்டால் சாக்ஷி கொலை செய்து விட்டதாக அர்த்தம்.

அடுத்ததாக மோகன் வைத்தியாவை, மைக்கல் ஜாக்சன் போல் நடனமாட வைக்க வேண்டும். இதையும் முகேன் உதவியுடன் வனிதா வெற்றிகரமாக செய்து முடித்தார். தற்போது இவர்கள் இருவரையும் ஆவிகராக கார்டன் ஏரியாவில் வைத்துள்ளார் பிக்பாஸ்.

இதில் வனிதாவின் சாமர்த்தியம் என்னவென்றால், இந்த இரண்டு கொலைகளை செய்த கொலைகாரி தான் தான் என சற்றும் வெளிக்காட்டி கொள்ளாமல், அபிராமியை கொலைகாரி என அனைவரையும் நம்ப வைக்க முயற்சி செய்து வருகிறார் வனிதா.