பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ஐஸ்வர்யா, சென்றாயன், மும்தாஜ், ஜனனி மற்றும் விஜயலஷ்மி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பிக் பாஸ் கூறும் டாஸ்கை சக போட்டியாளர்களை கன்வின்ஸ் செய்து செய்ய வைக்க வேண்டும். 

இதனால் ஜனனி கேட்டு கொண்டதன் பெயரில் , ஜனனியை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற பாலாஜி மொட்டை அடித்து கொண்டார். அதே போல சென்றாயான் இந்த எவிக்ஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவிடம் உதவி கேட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவும் சென்றாயனிடம் சொல்லுங்க செய்யுறேன என பாசமாக கூற, என் மேல இவ்வளவு பாசமா என நெகிழ்ந்து போன சென்றாயன் , ஐஸ்வர்யாவை தலைமுடியை பாதியாக வெட்டிக்கொள்ளும் படி கேட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதித்து கொண்டு முடியை வெட்டிக்கொண்டார். 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் பிக் பாஸின் சகுனி வேலை தான். பாலாஜிக்கு மொட்டை அடிக்க வேண்டிய நிலையை வரவழைத்த பிக் பாஸ் ஐஸ்வர்யாவுக்கு முடியை பாதியாக வெட்டி கொள்ளும் படியான டாஸ்கை கொடுத்திருக்கிறார். முடியை வெட்டுவது ஒன்றும் மொட்டை அடித்து கொள்வதை விட கஷ்டமான விஷயம அல்ல. ஆனால் அதற்கே ஐஸ்வர்யாவை தியாகி போல காட்டி இருக்கின்றனர் இந்த பிரமோவில்.

மேலும் பாலாஜிக்கு மொட்டை அடித்தது மும்தாஜ் தான். ஆனல் ஐஸ்வர்யாவிற்கு சக போட்டியாளரை முடி வெட்ட விடாமல் வெளியில் இருந்து ஆள் வரவழைத்து கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.
 ஐஸ்வர்யாவின் கூந்தல் அழகு மேல் அவ்வளவு அக்கறை போல பிக் பாஸுக்கு. இதை எல்லாம் பார்த்து செம கடுப்பாகி இருக்கிறார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர். அது வேறு யாருமல்ல ஆர்த்தி தான். 

இந்த முறை பிக் பாஸில் நடப்பதை எல்லாம் பார்த்தால், ஐஸ்வர்யாவுக்கு சாதகமான விஷயங்கள் தான் அதிகம் இருக்கின்றன என்பதை கூற வந்த ஆர்த்தி, பின் வருமாறு ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் “டாஸ்க்க உல்டாவா சொல்லிட்டியேமா! நல்ல நடிப்பு புரிஞ்சும் புரியாத மாதிரி! அம்மாடி! கவலப்படாதீங்க ஐஸ்வர்யா ஆர்மி பிக் பாஸ் டைட்டில், பிக் பாஸ் வீடு , பிக் பாஸ் எல்லாமே உங்க ஐஸ்வர்யாவுக்கு தான்” என கோபமாக பதிவிட்டிருக்கிறார்.