Asianet News TamilAsianet News Tamil

சபரிமலைக்கு செல்ல அடம்பிடிக்கும் பெண்கள்! இது மட்டும் தான் காரணமா? பளார் விடும் பிக்பாஸ் காயத்திரியின் கேள்விகள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.  இதற்கு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். அதே போல் கேரள அரசும் தீர்ப்பை அமல்படுத்த முன் வந்தது.

bigboss gayathi against ladies go to sabarimalai
Author
Chennai, First Published Dec 26, 2018, 1:23 PM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.  இதற்கு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். அதே போல் கேரள அரசும் தீர்ப்பை அமல்படுத்த முன் வந்தது.

ஆனால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் இது இருப்பதாக கூறி, ஐயப்ப பக்தர்கள் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

bigboss gayathi against ladies go to sabarimalai

பெண்கள் சபரிமலைக்கு சென்று உள்ள செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அங்கிருந்து திரும்பும் சூழல் உள்ளது. இந்நிலையில்  இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து 12  பெண்கள் சபரி மலைக்கு சென்றனர்.  அவர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுத்து சில போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினர்.

bigboss gayathi against ladies go to sabarimalai

இந்தநிலையில் சபரிமலைக்கு செல்ல முயற்சிக்கும் பெண்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து, அவர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

bigboss gayathi against ladies go to sabarimalai

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய பாரம்பரிய வழக்கங்களில் நம்பிக்கை இல்லாத பெண்கள் எதற்காக சபரிமலைக்குச் செல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.  அரசியல் காரணங்களால் மட்டுமே அங்கு செல்ல அடம்பிடிக்கிறார்கள்.  இதனால் எதை நிரூபிக்க போகிறீர்கள் உங்களுக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை இருந்தால் பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருவது போல் 50 வயதை கடந்த பிறகு அங்கு செல்லுங்கள் இவ்வாறு காயத்ரி கூறியுள்ளார். இதற்கு பலர் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios