பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்னும் மஹத்தின் நினைவுகள் மறைய வில்லை என்றாலும், பிக்பாஸ் வழக்கம் போல் தன்னுடைய வேலையை துவங்கியுள்ளது. நேற்றைய தினம் போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் கடிதம் வந்தது. அதனை ஒவ்வொருவராக எழுந்து படிக்கும் போது தங்களையே மறந்து அழுதனர்.

இந்நிலையில் தற்போது கொடுத்துள்ள டாஸ்க் அதையும் மிஞ்சும் அளவிற்கு உள்ளது. திடீர் என பிக் பாஸ் குரல் பிரீஸ் என கூறுகிறது. அனைவரும் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்களே அதை செய்தவாறு உறைந்து போய் நிற்கிறார்கள். மெல்லமாக பிக் பாஸ் கதவு திறக்கிறது. வெளியில் இருந்து மும்தாஜின் அம்மா, அண்ணன், மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் உள்ளே வருகிறார்கள். 

உள்ளே வந்ததும் மும்தாஜின் அம்மா, மும்தாஜை அவரை கட்டி அணைக்கிறார். பின் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவையும் கட்டி அனைத்து வாழ்த்துகிறார். அதே போல் மும்தாஜ் தன்னுடைய அண்ணனை கட்டி அணைத்து அழுகிறார். சில நிமிடம் அனைவருடனும் அமர்ந்து பேசுகிறார்கள். 

திடீர் என, பிக்பாஸ் குரல் மீண்டும் பிரீஸ் என்று கூறி, வீட்டிற்குள் வந்தவர்களை வெளியே அனுப்புகிறது. தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன் வெளியே செல்வதை பார்த்து மும்தாஜ் வாயை திறந்து அழக்கூட முடியாமல்... போக வேண்டாம் போக வேண்டாம் என கண் கலங்கி அழுகிறார். இப்படி ஆசை காட்டி பிக் பாஸ் மோசம் செய்து விட்டதே என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.