பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு,  நடிகை வனிதா வெளியில் சென்றவுடன், இந்த நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் குறைந்து விடும், என பலரும் நினைத்த நிலையில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வேறு விதமாக வெடித்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், லாஸ்லியா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் புரோமோ வெளியாகியுள்ளது.  

அதில், ஷெரின் ஒரு ஹார்ட் சப்பாத்தி சுடுவது காட்டப்படுகிறது. அதனை லொஸ்லியா வந்து குத்துகிறார். இதனால் அதிர்ச்சியான ஷெரின் கத்துகிறார். இதைத்தொடர்ந்து, தர்ஷன் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்கிறார். இதற்கு லாஸ்லியா நான் இப்படித்தான் செய்வேன் என்றும், குத்திட்டேன்... கொன்னுட்டேன் என என்றும் கூறுகிறார்.

மேலும் இன்னொரு சப்பாத்தி போட்டாலும் அப்படிதான் செய்வேன் என கூறுகிறார். பின் ஷெரின் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் காட்சி காட்டப்படுகிறது. ஏன் லாஸ்லியா,  ஷெரின் மீது இவ்வளவு கோபப்படுகிறார். இதற்கு காரணம் தர்ஷன் தானா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.