முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. 

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவ்வாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போலாமான்னு இருக்கேன் என ஒற்றை வார்த்தையில் ட்வீட் போட்டு, தமிழ்நாட்டையே பரபரப்பாக்கினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதட்டில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் படுக்கையில் இருந்த படி செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அப்போது செல்போன் கை நழுவி வாய் மீது விழுந்த போது, உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரைசாவின் ஆர்மி, போனுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம் என புலம்பி வருகின்றனர்.