பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு போர்க்களமாகவே மாறி வருகிறது. நாளுக்கு நாள் சில போட்டியாளர்களின் செய்கைகள் ரசிகர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சாகி கத்துவது, டாஸ் என்றால் போட்டியாளர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள்  அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 'உத்தம வில்லன்கள்' டாஸ்க் முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்கள் சற்று மனநிம்மதி அடைத்துள்ளனர்.

 

மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. இதில் 4 பேர் டாஸ்கை சரியாக செய்யாததால் 200 புள்ளிகள் வீதம் மொத்தம் 800 புள்ளிகள் குறைக்கப்பட்டது. அத்துடன் ரித்விகா, ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தரப்பில் இருந்து அறிவிப்பும் வந்தது.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அவர்கள், மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது நடிகை விஜய லட்சுமியும் வீட்டிற்க்குள் வந்துள்ளதால் அடுத்த வாரம் என்ன நடக்கும்... இவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை பார்க்க பலரும் ஆவலாக கார்திருக்கின்றனர்.