கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி நாட்களை நெருங்க நெருங்க தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எப்போதும் சண்டை சச்சரவு, என பிரச்சனைகள் மட்டுமே வெடித்து வந்த பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக  அன்பு, பாசம், கண்ணீர் என செண்டிமென்ட்டால் ரசிகர்கள் மனதை தொட்டு விட்டனர் போட்டியாளர்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போவது யார் என்பது குறித்து  சற்று முன் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தொகுப்பாளர் கமல்ஹாசன், யார் வெளியே சென்றால் நியாயமாக இருக்கும் என, மும்தாஜ், சென்ராயன், விஜி, ஜனனி என எவிக்ஷன் லிஸ்ட்டில் உள்ள அனைவரிடமும் கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு விஜி, எப்போதும் முன்னுக்கு பின்  முரணாக இருப்பது மும்தாஜ் என கூறுகிறார், பின் சென்ராயன் மும்தாஜ் டாஸ்கை ஒழுங்காக செய்யவில்லை. அவருக்கு பதிலாக மற்றொருவர் அதை செய்கிறார் என்று கூறுகிறார். இதற்கு மும்தாஜை பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா? என கேள்வி எழுப்பினார் கமல்.

இதைத்தொடர்ந்து பேசும் கமல், அனைவரும் ஆர்வமாக உச்சரித்த பெயர், இது நான் எதிர்பார்த்தது இல்லை என கூறி... எலிமினேஷன் பெயர் எழுதப்பட்ட அட்டையை படிக்க எடுக்கிறார். 

இந்த கவருக்குள் இருக்கப்போவது... நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் கூறியது போல் சென்ராயன் பெயர் தான், என்று கமல் இப்படி சூசகமாக பேசி அனைவருக்கும் புரிய வைத்துவிட்டார். ஒருவேளை இதில் ஏதாவது ட்விட்ஸ் இருக்கப்போகிறதா? என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.