’வெளியே ஒரு காதலி இருப்பதை தெரிந்தும் கூட இந்தக் கிழவி ஷெரின்  செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்.அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டும் தர்ஷன் அதை விடாமல் தேடுகிறான்.. என்ன கருமமோ!இந்த கள்ளக்காதல் எங்கே போய் முடியுமோ!’என்று மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது ‘பிக்பாஸ் 3’சீஸன் நிகழ்ச்சியின் 94வது நாள் புரோமோ வீடியோ ஒன்று.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினும் தர்ஷனும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்த மகத்தும், யாஷிகா ஆனந்தும் ஷெரினிடம் ‘உங்களுக்குப் பிடித்த ஒருவருக்குக் காதல் கடிதம் எழுதுங்க.அது ரகசியமாக வைக்கப்படும்’ என்று சொல்ல அதை நம்பி எழுதத்துவங்கும் ஷெரின் தன்னை சூழ்ச்சி செய்து மாட்டவைக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

இன்றைய புரோமோவில் அந்தக் குப்பைத் தொட்டியில் கிழித்துப்போட்டவற்றை பொறுப்பாகப் பொறுக்கும் தர்ஷன்,’ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’என்று ஷெரினை நோக்கிப்பாடுகிறார். உடனே பயங்கரமாக வெட்கப்படும் ஷெரின் ,’அதை நீ ஏன் படிச்சே. நீ படிக்கணும்னு இருந்தா நான் உன் கையிலயே கொடுத்திருப்பேன்’என்கிறார். அடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து கலாய்க்கும் சாண்டி ‘என்ன ஒரு மன தைரியம் அவனுக்கு? என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

இந்த புரோமோவுக்கு கீழே போடப்படும் கமெண்டுகளில் வழக்கத்தை விட அதிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி கிண்டலடிக்கப்பட்டுள்ளது. சில சாம்பிள்கள் ,...வெளியே ஒரு காதலி இருப்பதை தெரிந்து கூட இந்தக் கிழவி செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்.அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டும் அவன் விடாமல் தேடுகிறான்.. என்ன கருமமோ!
இந்த கள்ளக்காதல் எங்கே போய் முடியுமோ!...

கவின் லாஸ்லியாவை தவறாக பேசிய நாய்களுக்கு இந்த கள்ளக்காதல் மிகவும் புனிதமாக தான் தெரியும்..வெளியே ஒரு காதலி இருந்தும் இவர்கள் இருவரும் இவ்வளவு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்கிறார்கள்.. இப்போதாவது affair என்று ஒத்துக் கொள்வார்களா! இந்த குப்பை காதலுக்கும் வார இறுதியில் கமல் நன்றாக சொம்பு தூக்குவார்.

வெளியில் தர்ஷனுக்கு சப்போர்ட் இல்லை என்று தெரிந்து கொண்டு தர்ஷனை ப்ரமோட் செய்யும் வேலையில் #VijayTelevision #Sherin  யையும் சேர்த்துக்கொண்டுள்ளது. யார் கண்டது, #losliya and #Sandy in the danger zone..I guess so...

25 வயசு பயன் தர்ஷனை 35 வயசு ஆண்டி ரூட்டு விடுறத ரசிக்கிறானுங்க.. சுப்பர்னு சொல்றானுங்க.. ஆனா ஒரு 30 வயசு பையன் 23 வயசு பொண்ண காதலிச்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறானுங்க.. அடேய் உங்களுக்கு என்னதான் டா வேணும்?
இப்படி கள்ளக் காதலா??