பிக் பாஸ் வீட்டில் கடந்த ஓரிரு நாட்களாகவே கிராமத்து செட் அப்புடன் நிகழ்ச்சி கலை கட்டி வருகிறது. நடிகர் சேரன் நாட்டாமையாகவும், மதுமிதா கிராமத்து தலைவியாகவும், சரவணன் மைனர் குஞ்சி என அனைவரும் ஒவ்வொருவரும், ஓவ்வொரு வேடத்தை ஏற்று அதன் போல் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ, ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சி கலை கட்டுவது தெரிகிறது.

நடிகர் சேரன், மாலை போட்டு சரவணனை வரவேற்று ஏதோ விழா எடுக்கிறார். இதில் கவின், நம் பிக்பாஸ் வீட்டில் என்ன தான் சண்டை இருந்தாலும், சோறுன்னு வரும்போது எல்லோரும் சண்டையெல்லாம் மறந்து, சாப்பிட துவங்கி விடுகிறார்கள்.

பின் ஊரு விட்டு ஊரு வந்து என்கிற பாடலை சாண்டியும், கவினும் பாட அதற்கு சாக்ஷி, ரேஷ்மா, அபி உள்ளிட்ட போட்டியாளர்கள் நடனமாடுகிறார். 

அந்த ப்ரோமோ இதோ;