நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள, 'அலோகா' படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நகுல் நடித்த 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'  படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  இந்த படத்தை தொடர்ந்து, 'அச்சமின்றி', 'பாயும் புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் இவரால், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

இதனால் விஜய் டிவியில், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை பயன்படுத்தி 16 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தார்.

ஆரம்பத்தில் சாதுவாக இருந்த இவர்,  நாட்கள் செல்ல செல்ல ராட்ச்சஷி போல் மாறினார்.  இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிதாக ஆதரவு  கிடைக்கவில்லை.  இவரை வெளியேற்ற வேண்டும் என ஒவ்வொரு முறையும் மக்கள் நினைத்தாலும், இவருடைய தோழி யாஷிகா இவரை காப்பாற்றினார். இதனால் ஒருகட்டத்தில் யாஷிகா வெளியேறும் நிலையும் உருவானது.

மேலும் பிக்பாஸில் ரித்திகா வெற்றி பெற, ரன்னராக இருந்தவர் ஐஸ்வர்யா.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் மஹத்துக்கு ஜோடியாக ஒரு படத்திலும், வரலக்ஷ்மியுடன் ஒரு படத்திலும், 'அலோகா' என்கிற படத்தில் ஆரிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்துள்ள அலோகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

 

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், போர்வைக்குள் இருந்து காதலர்களின் கால்கள் மட்டுமே தெரியும் படி உள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்!  மேலும் இதில் இது காமகதை அல்ல... காதல் கதை என்றும் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர். இதில் இருந்து இந்த திரைப்படம் முழு காதல் படமாக உருவாக உள்ளது தெரிகிறது.