பிக்பாஸ் வீட்டில் இருந்து, நடிகை அபிராமி வெளியேறியபின் முதல் வேலையாக, தல அஜித்துடன் தான் நடித்த 'நேர்கொண்ட பார்வை', படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார். அப்போது ரசிகர்கள் அனைவரும் இவருடன் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்து கொண்ட வீடியோவை அபிராமி வெளியிட்டுள்ளார். 

நடிகையும் மாடலுமான அபிராமி வெங்கடாச்சலம், கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார். 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சி ஆரம்பமான போது, மிகவும் ஜாலியான போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்டாலும், பின் எதற்கு எடுத்தாலும் அழுது கொண்டே இருந்ததால், அழுமூஞ்சி அபிராமியாகவே பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறிய போதே, முதல் வேலையாக தான் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்க்க வேண்டும் என கூறி விட்டு தான் சென்றார்.

அவர் சொன்னது போலவே, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும்,  சென்னையில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நேற்று அபிராமி, 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். அப்போது தன்னுடைய காட்சி வரும் போது, எப்படி ஆரவாரம் செய்து படத்தை பார்த்தார்கள் என்பதை கண்டு பூரிப்படைத்தார் அபிராமி. 

படம் முடிந்தபின்னர், அபிராமியுடன் பல ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்து கொண்டனர். பலர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து, இவரிடம் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.  இதுபற்றிய விடியோவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் அபிராமி. மேலும் இந்த வீடியோ தற்போது, வைரலாகி வருகிறது.