பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.
அபிராமி வெங்கடாச்சலம்:
பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.
நடிகை அவதாரம்:
மாடலிங் துறையில் உள்ள அனுபவத்தை வைத்து பல படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நடிகை அபிராமிக்கு, முதல் படமே அடித்தது ஜாக்பார்ட். பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த, பிங்க் படத்தின் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில்... தல நடிப்பில் உருவானது. இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
மேலும் விமர்சனம் ரீதியாகவும் இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்ததும், விஜய் டிவி தொலைக்காட்சியில், நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆரம்பமே அவப்பெயர்:
நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறினார். பின்னர் முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறியது ரசிகர்களுக்கு இவர் மீது வெறுப்பை தான் வரவைத்தது. இதனால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
நடிப்பில் ஆர்வம்:
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளார் அபிராமி. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
டிக் டாக்குக்கு கும்பிடு:
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கும், அபிராமி... தன்னுடைய பெயரில் அதிகம் போலி கணக்குகள் உள்ள வருவதை கண்டு அதிருப்தியில் உச்சத்திற்கே சென்றுள்ளார். இதனால் இனி இந்த வம்பே வேண்டாம் என அதில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இவர் விலக உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 11, 2020, 10:44 AM IST