பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளராக களம் இறங்கி வருகிறார்கள். குறிப்பாக வரவே மாட்டார்கள் என அடித்து கூறிய பிரபலங்கள் சிலர் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, ஆச்சர்யப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை மொத்தம் ஒன்பது போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். முதல் போட்டியாளராக  பாத்திமா பாபு, பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக லெஸ்லியா,  மூன்றாவது போட்டியாளராக சாக்ஷி அகர்வால்,  நான்காவது போட்டியாளராக மதுமிதா,  ஐந்தாவது போட்டியாளராக கவின்,  ஆறாவது போட்டியாளராக அஜித் பட நடிகை அபிராமி வெங்கடாச்சலம், ஏழாவது போட்டியாளராக பருத்திவீரன் சரவணன்,  எட்டாவது போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

 

இவர்களை தொடர்ந்து, கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவே மாட்டார் என பலரும் கூறிய ஒரு பிரபலம் இயக்குனர் சேரன். அவர் தான் ஒன்பதாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.