பிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய பிரபலம் யார்! வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், புதிதாக யாரோ ஒருவர் இன்று, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் முழுக்க பெரிதாக பிரச்சனைகள் வெடிக்காவிட்டாலும், தொடர்ந்து இதோ போன்றே செல்ல வாய்ப்பில்லை என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. 

இந்நிலையில், சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோவில் அபிராமி, சாக்சி, மற்றும் ஷெரின் மூவரும் ஜாலியாக 'பாப்பா பாடும் பாட்டு' என்ற பாடலை பாடி கொண்டிருக்க அதை பார்த்த சாண்டி, 'அனேகமாக இந்த வீடு அடுத்த வாரம் யுத்தகளமாக மாறும் என்று நினைக்கின்றேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என்று நினைக்கின்றேன்' என்று கூறுகிறார். 

இன்றைய புரோமோவில் 'இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே' என்ற வாசகம் இருப்பதும், பிக்பாஸ் வீட்டின் வெளிக்கதவு திறக்கும் காட்சியும் இருப்பதால் புதிய நபர் வீட்டிற்குள் வரும் காட்சியும் இன்று உண்டு என தெரிகிறது. விருந்தினரா? அல்லது 16 ஆவது போட்டியாளரா என்பது இன்றைய நிகழ்ச்சியின் தெரியவரும்.