நடிகர் வையாபுரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அழுது தன்னுடைய குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். மேலும் கூடுவதுடன் இருந்தபோது நான் அவர்களை ஒரு படத்திற்கு கூட அழைத்து சென்றதில்லை, அவர்களிடம் அன்பாக நடந்ததில்லை இப்போது தான் தன்னுடைய குடும்பத்தின் அருமை புரிகிறது என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அதே போல ஒவ்வொரு வாரமும், தன்னை தயவு செய்து நாமினேட் செய்து என்னை வீட்டுக்கு போக விடுங்கள் என கூறிவருகிறார்... கடந்த வாரம் கூட ஜூலியிடம் இதனை கூறினார்.

இந்நிலையில் நேற்றும் நான் வீட்டுக்கு போகவேண்டும், அதற்கு அனைவரிடமும் தன்னை நாமினேட் செய்யும்படி கூறவேண்டும் என அவர் தெரிவித்தார். அதே போல தன்னை நாமினேட் செய்தல்வேண்டும் என்றால் அனைவரையும் நான் இடுப்புலயே ஒதைக்கணும்... அப்போது தான் அவரு என்ன ஒதச்சிட்டாரு என்று கூறி தன்னை நாமினேட் செய்வார்கள் என கூறி புலம்பிவருகிறார்.