பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒருவரை பற்றி மற்றவர்களிடம் குறை கூறி வருவதாக, தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. 

தற்போது இவர், பிக்பாஸ் வீட்டின் 3வது தலைவியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வாரம் குறை கூறி மாட்டியதால், தற்போது யாரையும் பற்றி எதுவும் பேசாமல் நிதானமாக விளையாடி வருகிறார் என்று தோன்றுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பத்திரிக்கையாளராக இருந்த சாவி என்கிற சா.விஸ்வநாதனின் பேத்தி தான் இந்த வைஷ்ணவி. இவருடைய தாத்தா,  சாவி என்கிற பத்திரிக்கையை துவங்கி பல சினிமா கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி பிரபலமானவர். 

இந்த பிரபலத்தின் பேத்தியான வைஷ்ணவியும் ஒரு விதத்தில் மிகவும் பிரபலம் தான். 104.8 சென்னை வானொலியில் பல வருடங்களாக ஆர்.ஜே.வாக வேலை செய்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பேசி அதன் மூலம் பிரபலமானவர்.

 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் இவரை பற்றி தெரிந்து கொள்ள பல ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இவருடைய பழைய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

இதில் வைஷ்ணவி 7 விநாடியில் ஒரு கண்ணாடி கிளாசில் உள்ள பீர்ரை ஸ்ரா போட்டு உரிந்து குடிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆக இவரை பலர் விமர்சிக்கவும் துவங்கியுள்ளனர்.

அந்த வீடியோ இதோ...