big boss sesson 2 anchor kamalhassan

உலக நாயகன் கமலஹாசன், கடந்த ஆண்டு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் மக்களை இந்த நிகழ்ச்சியின் பக்கம் திசை திருப்பினார் கமல்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட, பிரபலங்கள் அனைவரும் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கமே... நாம் திரையில் பார்த்து ரசித்த பிரபலங்களை, அழைத்து வந்து 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்க வைப்பார்கள். இவர்களுக்கு செல் போன், பேப்பர், டிவி என எந்த வெளியிலக தொடர்பும் இருக்காது. மேலும் இவர்களுக்கு சில டாஸ்க் கொடுக்கப்படும். அவர்கள் மற்ற போட்டியாளர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறாரா... மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பேசப்படுகிறார். என ஒட்டு போட்டு ரசிகர்கள் தான் இவர்களை எலிமினேட் செய்வார்கள். சில சமயங்களில் எதிர்பாராத மாற்றங்களும் நடக்க வாப்புள்ளது.

பிக் பாஸ்2:

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவர் புதிதாக துவங்கியுள்ள 'மக்கள் நீதி மய்யம்' கட்சின் வேலைகளில் பிஸியாக இருந்தாலும். மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க முடிவு செய்துவிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடன் நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கலாம் என நம்புவதாகவும் சமீபத்தில் தெரிவித்தார். 

அதன்படி தற்போது பிக் பாஸ் ப்ரோமோ படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதில் ஓவியா மற்றும் சிநேகன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மற்ற போட்டியாளராக களமிறங்க உள்ள பிரபலங்கள் யார் யார் என தேர்வு செய்து விட்டாலும், அந்த தகவலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.