பல ஆண்டுகளாக இந்தியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழில் நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தற்போது பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்து அனைவரும் பிஸியாக நடிதுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் வரவேற்கப்பட்டவர் நடிகை ஓவியா, இவருடைய நல்ல மனம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. ஆரவ் மீது ஏற்பட்ட காதல் காரணமாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் ஓவியா என்பதும் அனைவரும் அறிந்தது தான். 

மேலும் 100 நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றிபெற்றார்.

தொகுப்பாளராக கமல்:

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன், பல்வேறு பிரச்சனைகள் வந்த போதும் அதனை சாதூர்யமாக சமாளித்து நிகழ்ச்சியை மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றவர். இவர் போட்டியாளர்களை கேள்வி கேட்கும் விதம்,  அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுவது ஆகியை பல ரசிகர்களுக்கும் பிடிக்கும். 

பிக் பாஸ்2:

இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தமிழில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமலுக்கு பதில் நடிகர் சூரியா, அல்ல அரவிந்த் சாமி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

மீண்டும் கமல்:

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருவதால், இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் நினைத்த நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. 

இப்படி ஒரு காரணமா?

இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் போது... மக்களிடம் ஒரு சில நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்கலாம் என்கிற எண்ணத்தில் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஒற்றுக்கொண்ட காரணம் என்று கூறப்படுகிறது.