முதல் இரண்டு சீஸன்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் ஓவராக சூடுபிடித்துள்ள நிலையில், அந்நிகழ்ச்சியின் எலிமினேசன் முறை இம்முறை வழக்கத்தை விட அதிக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.தற்போதும் எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கப்பட்டு பாத்திமா பாபு, வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இருவரின் எலிமினேஷனுமே பலத்த சர்ச்சைக்கு ஆளாகியுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக, தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை டேனி, விமர்சித்துள்ளார். 

இது குறித்து கூறிய டேனி, ”போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதில் தொடர்ந்து பல குளறுபடிகள் நடக்கிறது. கடந்த முறை சென்ராயன் வெளியேற்றப்பட்ட போது பெரிய சந்தேகம் எழுந்தது. என் மனைவியே அவருக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சில இணையதள வாக்கெடுப்புகளை காடினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டது எப்படி என சந்தேகம் எழுந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

 டேனியின் இந்த விமர்சனத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்த மவுசு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதோடு, ஏற்கனவே நாடகம், ஏமாற்றுவேலை என்று சிலரால் விமர்சிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதில் கூட முறைகேடு நடப்பது, அந்நிகழ்ச்சியின் போட்டியாளர் மூலமாகவே தெரிய வந்திருப்பதால், பிக் பாஸ் வெறும் டிராமா என்று பேச்சு அடிபடுகிறது. அடுத்த எலிமினேஷனில் வெளிப்படைத்தனம் இல்லாமல் போனால் நிகழ்ச்சி பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று தெரிகிறது.