தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, ஒரு வாரத்திற்கு பின் தெலுங்கிலும் ஆரம்பிக்கப்பட்டு  ரசிகர்களின் வரவேற்பை பெற்று பெற்று அமோகமாக ஒளிபரப்பாக்கி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கடத்த சில வாரத்திற்கு முன், நடிகர் பரணி சுவற்றில் ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலை தற்போது தெலுங்கிலும் ஒரு  நடிகருக்கு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் சம்பூர்னிஷ் பாபு தன்னை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளார் .

அவரின் மோசமான செயலை கண்டு  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை எலிமினேட் செய்வதாக அறிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.