big boss new nomination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத மாற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில்... தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஓவியாவை தவிர்த்து மற்ற போட்டியாளர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் தோற்ற அணியில் இருப்பவர்கள் புதிதாக நாமினேட் செய்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பலாம் என பிக் பாஸ் கூறுகிறார்.

இந்த போட்டியில் தோற்ற ஆரவ், சக்தி, காயத்ரி ஆகிய மூன்று பேரில் ஒருவரை வெற்றி பெற்ற அணியில் உள்ளவர்கள் நாமினேட் செய்கின்றனர்.

முதலாவதாக வரும் பிந்து மாதவி, சக்தியின் பெயரை சொல்கிறார், ரைசா ஆரவையும், கணேஷ் சக்தியையும், அடுத்ததாக வரும் வையாபுரி மூன்று பெயரையும் கூட வெளியே அனுப்ப எதாவது வாய்ப்பிருக்கா? என கேட்கிறார். ஒருவேளை இதில் நாமினேட் ஆனவர்கள் அடுத்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.