Big Boss Julie to be an actress Next heroine ...
பிக்பாஸ் ஜூலி தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட சல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது எதிர்ப்பையும் பெற்று தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார் ஜூலி.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் உள்பட பலர் நடிக்கும் படம் மன்னர் வகையறா.
இந்தப் படத்தை விமல் தயாரிக்கிறார். வெறும் காமெடிக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிக்பாஸ் ஜூலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இந்த நிலையில், தற்போது, விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜூலி கூறுகையில், "நான் நடிப்பது உண்மை தான். ஆனால், அதன் கதாபாத்திரம் தொடர்பாக நான் சொல்வதற்கு எனக்கு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜூலி அடுத்து, ஹீரோயினாக நடிப்பதற்கு கூட வாய்ப்பிருக்காம்.
