பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கொஞ்சம் அதிகம் ஆட்டம் போட்டு வரும் போட்டியாளர்கள் என்றால் அது யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் என கூறலாம். 

இவர்கள் இப்படி அனைத்திலும் விளையாட்டு தனமாக இருந்தாலும், டாஸ்க் என்று வந்துவிட்டால் மிகவும் கவனமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை செய்து முடிப்பார்கள்

மேலும் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களை விட சிறியவர்கள் என்பதால், இவர்கள் முகம் சுழிக்கும் செயல்களை செய்தாலும் அதனை பெரிதாக யாரும் எடுத்து கொள்வதில்லை. 

இந்நிலையில், ஓவர் ஆட்டம் போட்ட இவர்களுக்கு அதிரடியாக ஆப்பு வைத்துள்ளது பிக்பாஸ். அதன் படி இவர்கள் மூன்று போரையும் பிக் பாஸ் அறைக்கு அழைத்து, மூவரில் ஒருவரது பெயரை நீங்கள் நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் குரல் கூறுகிறது. 

இதற்கு ஐஸ்வர்யா யாரையும் தன்னால் நாமினேட் செய்ய முடியாது என கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் கண்டிப்பாக ஒருவரின் பெயரை நாமினேட் செய்தே ஆக வேண்டும் என கூறுகிறார். 

மஹத் ஏன் பிக்பாஸ் என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டி விட்டீங்க.... என புலம்பிக்கொண்டு இறுதியாக யாஷிகாவின் பெயரை நாமினேட் செய்துள்ள ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் கண்டிப்பாக இந்த மூன்று பேரின் பெயர்களில் ஒருவரின் பெயர் இந்த வாரம் நாமிநேஷன் லிஸ்டில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.