நடிகை, நடன இயக்குனர் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட பிரபலமாக இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம். இவர் வெள்ளிதிரையை தாண்டி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். மேலும் பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

பிக் பாஸ் சர்ச்சை:

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியபோது பல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். 

காரணம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி பேசியும், அனைவருக்கும் பிடித்த ஓவியாவை எப்போதும் திட்டிக்கொண்டிருந்தது தான் காரணம். இவர் நடந்துக்கொண்ட விதம் சிலருக்கு அதிருப்தியை ஏற்ப்படுதியதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

கைது செய்யப்பட்டாரா?

இந்நிலையில் காயத்ரி ரகுராம் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்ரி "இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

எச்சரிக்கை:

மேலும் தான் கடந்த 25 நாட்களாக, அமெரிக்காவில் இருந்து வருவதாகவும், இப்படி தன்னை பற்றி அவதூறு பரப்பிய தொலைக்காட்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

பிரபலமாக இருக்கும் இவரை பற்றி இப்படி ஒரு தகவல் பரவியது மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.