உன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், தனி ஒருவன், தொடரி போன்ற படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழகத்தின் டாப் பிரபலமாக மாறிப்போனார். கனா காணும் காலங்கள், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து வந்த நிஷாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

சமீபத்தில் கணேஷ் வெங்கட்ராமன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் காதல் தம்பதியை மனதார வாழ்த்தினர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமன், தங்களது மகளுக்கு சமைரா எனப் பெயர் வைத்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தார். 

தற்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் போட்டோ ஷூட் வைத்து அழகான நினைவுகளாக மாற்றிக் கொள்வது என்பது வழக்கமாக உள்ளது. அதன்படி காதல் தம்பதி கணேஷ் வெங்கட்ராமன், நிஷா தங்களது குட்டி தேவையுடன் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை முதல் முறையாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் தனது குட்டி தேவதையின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கணேஷ் வெங்கட்ராமன், ஒரு சின்ன முகத்தில் எல்லா கடவுள்களின் தெய்வீகமும் அடங்கிவிட்டது. வணக்கம் நண்பர்களே, எங்களது  குட்டி இளவரசி சமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். பிறந்து சில மாதங்களே ஆன குட்டி தேவதை சமைராவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.