சின்னத்திரையில் பிரபலமானவர்கள் அனைவராலும் வெள்ளித்திரையில் ஜொலிப்பது சற்று கஷ்டமான விஷயம் தான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், மக்களுக்கு தங்களுடைய உண்மையான குணத்தை காட்டி பிடிக்க வைத்து விட்டால் பிரபலங்களுக்கு நிகராக அவர்களை பார்க்கின்றனர் ரசிகர்கள்.

அதனால் பல இளம் நடிகர்கள்,  நடிகைகள், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் மாடல்கள் என பலரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இந்த வருடமும் பல இளம் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளராக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜாங்கிரி மதுமிதா களமிறங்கி உள்ளார். தொடர்ந்து 4 பெண் போட்டியாளர்களை களம் இறங்கி வந்த நிலையில், ஐந்தாவதாக ஆண்  போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களிலும், நடிகை ரம்யா நம்பீசனுடன் நட்புன்னா என்னனு தெரியுமா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் கவின்.