குழந்தையை தத்தெடுக்க உதவுங்கள்... ராகவா லாரன்ஸிடம் கெஞ்சிய பிக்பாஸ் பிரபலம்...!

சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருப்பவர் கஜால் பசுபதி, கோ, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., கலகலப்பு 2 என நிறைய படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் கஜால் பசுபதி தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். விஜய் டி.வி. தயாரித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற கஜால் பசுபதி மிகவும் பிரபலமானார். நடன இயக்குநரை காதலித்து திருமணம்  செய்து கொண்டார். ஆனால் சில காலங்களுக்குப் பிறகு கருத்து வேறு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது அம்மாவுடன் வசித்து வரும் கஜால் பசுபதி, குழந்தை ஒன்றை தத்தெடுக்க தனக்கு உதவுமாறு நடிகர் ராகவா லாரன்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித், 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது, திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் சுஜித்தின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தனர். அதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், ஒரு குழந்தையை தத்தெடுத்து சுஜித் எனப் பெயர் வையுங்கள் என சுஜித்தின் பெற்றொருக்கு கோரிக்கை வைத்தார். அப்படி குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் தானே உதவுவதாகவும், குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாகவும் அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.

தற்போது அவருடைய பதிவை பார்த்த காஜல் பசுபதி, மாஸ்டர், உங்க போன் நெம்பர் என்கிட்ட இல்லை. எனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை. குழந்தை இல்லாத வாழ்க்கை நிறைவடையாது. ஆனால் தத்தெடுப்பது என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. எனவே குழந்தையை தத்தெடுக்க எனக்கு உதவுங்கள். நான் அந்த குழந்தைக்கான மொத்த செலவையும் ஏற்க தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு ராகவா லாரன்ஸ் என்ன பதில் சொல்லப் போறாருன்னு பொறுத்திருந்து தான் பார்க்கனும்.