பிக் பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் மீரா மிதுன். ஆனால், தன் மீது கூறப்படும் எந்த புகார்களைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மனதிற்கு பிடித்த மாதிரி ஜாலியாக வாழ்ந்து வருகிறார் அவர். தொடரும் புகார்கள், துரத்தும் போலீஸ் என எந்த டென்சனும் இல்லாமல், நண்பர்களுடன் பீர் குடிப்பது, புதிய படங்களில் ஒப்பந்தம் ஆவது, பப்பில் நண்பர்களுடன் குத்தாட்டம் போடுவது என தொடர்ந்து மீரா பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தனது தொழில் போட்டியாளர் ஒருவரை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியதாக ஒரு ஆடியோ ரிலீஸாகி பரபரப்பாகியுள்ளது.

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று தற்போது வெளியேற்றப்பட்டிருக்கும் மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தால் அவரிடம் இருந்து மிஸ்.சவுத் இந்தியா பட்டமும் திரும்ப பெறப்பட்டது.இதற்கிடையே, அழகிப் போட்டி நடத்துவதாக கோசடி செய்த மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே போலீஸ் அவரை விசாரித்தது. அங்கேயே அவர் கைது செய்யப்படுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படவில்லை.

 இந்த நிலையில், தன் மீது போலீசில் புகார் அளித்த ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டம் போட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது நண்பர் ஒருவரிடம் போனில் கோபமாக பேசும் மீரா மிதுன், “ஜோ மைக்கேல் கால், கையை உடைத்து ஆறு மாதங்கள் பெட்டில் போட்டுவிடலாமா அல்லது கொலை செய்து விடலாமா, அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்” என்று கூறுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 ஏற்கனவே சில வழக்குகளை எதிர்கொண்டு வரும் மீரா மீதுன், இந்த போன் உரையாடல் மூலம் பெரிய அளவில் சிக்கலில் சிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து போலீசில் ஜோ மீண்டும் புகார் அளித்தால், கொலை முயற்சி வழக்கில் மீரா மிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதே சமயம், இந்த ஆடியோ மீரா மிதுன் பேசியது தானா, என்பதில் இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. யாராவது அவரது எதிரிகள் அவரை பிரச்சினையில் சிக்க வைக்க, இதுபோன்ற வேலையை பார்த்தார்களா என்பது தெரியவில்லை. பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து படங்களில் நல்ல வாய்ப்புகளை அறுவடை செய்துவிடலாம் என்று பிளான் வைத்திருந்த மீராவுக்கு இந்த ஆடியோ பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.