பிக்பாஸ் சீசன் 3 , தற்போது ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்களுடன், துவங்கியுள்ளது. மேலும் அனைத்து பிக்பாஸ் ரசிகர்களும், அடுத்தடுத்து எந்த பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்குவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக களமிறங்கியுள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

ஏற்கனவே முதல் போட்டியாளராக செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில், அவரை தொடர்ந்து, இரண்டாவது போட்டியாளராக, சக்தி என்கிற தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராக அனைவராலும் நன்கு அறியப்பட்ட கிழக்கு மாகாணம்  திருகோணமலை சேர்ந்த லொஸ்லியா கலந்துகொண்டுள்ளார்.

அவரை தொடர்ந்து பிரபல மாடலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் அவருக்கு மருமகளாக நடித்த சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டுள்ளார்.