big boss celebraties participate music festival
பிக்பாஸ்
கடந்த ஆண்டு மக்களை மற்ற வேலைகளில் நாட்டம் செல்லாமல் உற்று நோக்க வைத்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அழுகை,வெறுப்பு,காதல் என அனைத்து உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.அதில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிரபலமாகினர்.
இசை நிகழ்ச்சி
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்களான ஓவியா,ஜூலி,ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் ஆகியோர் பங்குபெறும் இசை எஃப் எம் இசை நிகழ்ச்சி மலேசியா சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்ச்சி வரும் 17 ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஸ்டார்எக்ஸ்போ சென்டர் கேடபள்யுசி பேஷன் மாலில் மற்றும் அதற்கு மறுநாள் சிங்கப்பூரில் சன்டெக் கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது.
ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக பிரபலமானவர் நம்ம ஓவியாதான்.அவரது இயல்பான நடவடிக்கை மூலம் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிமாநிலம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஓவியாவுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
சிம்புவுடன் இணைந்து ஓவியா மரண மட்டை நியூ இயர் பாடலை பாடினார்.இந்த பாடல் வைரலானது.இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் ஓவியா பாடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
