big boss awards
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தினமும் ஏதேனும் ஒரு போட்டிகள் நடத்த படுகிறது, அப்படி இவர்களுக்கு ஏற்கனவே லெமன் அண்ட் ஸ்பூன், கோணி பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று இவர்களுக்குள் மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டு, பாட்டு நடனம் மற்றும் நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
முதலாவதாக ரைசா, கணேஷ் வெங்கட், மற்றும் வையாபுரி ஆகியோர் "ஊ லலல்லா" என்ற பாடலை மிகவும் அருமையாக பாடினர். அதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம், சக்தி, ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் வீரம் படத்தில் இடம்பெறும் "ஜிங் ஜிக்கா ஜிங்" என தொடங்கும் பாடலுக்கு நடனம் ஆடினார். இதனை தொடர்ந்து ஆர்த்தி, ஜூலி, கஞ்சா கருப்பு மற்றும் பரணி ஆகியோர் "பாகுபலி" படத்தில் இடம் பெரும் ஒரு காட்சியை காமெடியாக நடித்து காட்டினர்.

இறுதியில் இதில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய நடன குழுவிற்கு பரிசு கோப்பையை பேராசிரியர் சினேகன் வழங்கிறனார். சிறந்த மாணவராக சக்தியும், மாணவியாக ரைசாவையும் தேர்தெடுத்துள்ளதாக கூறி அவர்களுக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது

சிறந்த முன்னேற்றத்திற்காக ஓவியாவிற்கும், சிறந்த உதவியாளராக கஞ்சா கருப்பும் தேர்தெடுக்கப்பட்டு பரிசு கோப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இப்படி கொடுக்கப்பட்டுள்ள விருதுகளிலும் சினேகன் உள்குத்தோடு நடந்து கொண்டது போலவே தெரிகிறது, அவர் நியாயமாக வழங்கவில்லை என பல நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
