பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் 3 பேர் ! இந்த வார அதிரடி !!

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 70 நாட்களாகிவிட்ட நிலையில் இந்த வாரம் 3 பேர் விருந்தினர்களாக வீட்டுக்குள்  நுழைய உள்ளனர்.

Big boss 3 enter in to house

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கும் பிக் பாஸ்  நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். 

Big boss 3 enter in to house

இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீது கடந்த சீசனை விட சர்ச்சைகள் அதிகமாக கிளம்பியுள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றபடவில்லை. 

Big boss 3 enter in to house

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று  பேர் விருந்தினர்களாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர். 

இவர்கள் மூவரும் ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வர வேண்டும் என கமல் கேள்வி எழுப்பினார். அதில் பெரும்பாலும் அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா பெயரை கூறினர் . எனவே இந்த 3 பேரும் இந்த வாரத்தில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios