big boss 2 in ajith ganesh venkatram reveled
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இதில் யார் நடுவராக இருந்தால் நன்றாக இருக்கும் என கணேஷிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கணேஷ், அஜித் சார் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், காரணம் அவர் மிகவும் நேர்மையான மனிதர் என்றும் கூறியுள்ளார். கணேஷ் தன்னுடைய மனதில் பட்டதைக் கூற... தற்போது இது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
